பீம் ஜன்மபூமி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox monument பீம் ஜன்மபூமி (Bhim Janmabhoomi) (அதாவது, "பீமின் பிறப்பிடம்") என்பது பாபாசாகேப் அம்பேத்கருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும். இது இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் மோவ் (இப்போது டாக்டர். அம்பேத்கர் நகர்) என்ற இடத்தில் அமைந்துள்ளது. மேலும், இது ஏப்ரல் 14, 1891 இல் மோவில் பிறந்த அம்பேத்கரின் பிறப்பிடமுமாகும். [1] [2] மத்தியப் பிரதேச அரசு இந்த பிரமாண்டமான நினைவுச்சின்னத்தை கட்டியது. இந்த நினைவுச்சின்னம் அம்பேத்கரின் 100 வது பிறந்த நாளன்று - ஏப்ரல் 14, 1991 - அப்போதைய மத்தியப் பிரதேச முதல்வர் சுந்தர்லால் பட்வா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. நினைவுச்சின்னத்தின் கட்டிடக்கலை கட்டிடக் கலைஞர் இ.டி. நிம்கடே என்பவர் மேற்பார்வையிட்டார். பின்னர், ஏப்ரல் 14, 2008 அன்று, அம்பேத்கரின் 117 வது பிறந்த நாளானறு, நினைவுச்சின்னம் திறந்து வைக்கப்பட்டது. [3] நினைவுச்சின்னத்துடன் கிட்டத்தட்ட 4.52 ஏக்கர் நிலம் இணைக்கப்பட்டுள்ளது. [4]

ஒவ்வொரு ஆண்டும், அம்பேத்கரை பின்பற்றும் இலட்சகணக்கான பௌத்தர்களும், பிற சுற்றுலாப் பயணிகளும் இந்த இடத்திற்கு வருகை தருகிறார்கள். குறிப்பாக ஏப்ரல் 14 அன்று அம்பேத்கரின் பிறந்த நாளை ஆடம்பரமாகவும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழ்வார்கள். [5] மோவ் போபாலிருந்து 216 கி.மீ தொலைவிலும், இந்தூரிலிருந்து 20 கி.மீ தூரத்திலும் உள்ளது. இந்த இடத்திற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2016 ஆம் ஆண்டில் 125 வது அம்பேத்கர் பிறந்தநாளில் வருகை புரிந்து பார்வையிட்டு பாபாசாகேப்பிற்கு அஞ்சலி செலுத்தினார். [6] [7] 2018 ஆம் ஆண்டில், 127 வது அம்பேத்கர் பிறந்தநாளில் , இந்தியாவின் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த், இங்கு வருகை தந்து பாபாசாகேபிற்கு அஞ்சலி செலுத்தினார். [8] [9] [10] இந்த நினைவுச்சின்னம் அம்பேத்கரின் வாழ்க்கை தொடர்பான ஐந்து புனித தளங்களில் ஒன்றாகும். [11] மத்தியப் பிரதேச அரசு ஒவ்வொரு ஆண்டும் சமாஜிக் சமரஸ்த சம்மேலன் என்ற மாநாட்டை இங்கு ஏற்பாடு செய்கிறது. இது தவிர, பல்வேறு சமூக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. [12]

வரலாறு[தொகு | மூலத்தைத் தொகு]

இந்த நினைவுச்சின்னம் அம்பேத்கருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கரின் தந்தை இராம்ஜி மலோஜி சக்பால் புனேவில் உள்ள பான்டோஜி பள்ளியில் கல்வியை முடித்து, இந்திய பிரிட்டிசு இராணுவத்தில் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பிரதம ஆசிரியராகவும் பின்னர் தலைமை ஆசிரியராகவும் முக்கியத்துவம் பெற்றார். 14 ஆண்டு தலைமை ஆசிரியரின் பணிக்குப் பிறகு, இராணுவத்தில் சுபேதார் பதவி உயர்வு வழங்கப்பட்டு மோவுக்கு அனுப்பப்பட்டார். மோவ் இராணுவ தலைமையகமாக இருந்தது. இங்கு அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி, பிறந்தார். அம்பேத்கரின் பிறந்த பெயர் பீம், பிவா மற்றும் பீம்ராவ் என்றும் அழைக்கப்பட்டார். தீண்டாமை ஒழிப்பு, இந்திய அரசியலமைப்பு மற்றும் பௌத்த மறுமலர்ச்சி மற்றும் பிற நடவடிக்கைகள் காரணமாக, பாபாசாகேப் அம்பேத்கர் உலக அரங்கில் குறிப்பிடத்தக்க நபராக கருதப்படுகிறார். பின்னர், தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய பாபாசாகேப் அம்பேத்கரின் பிறப்பிடம் புனித நிலமாகவும் முக்கியமான இடமாகவும் மாறியது.

மார்ச் 27, 1991 அன்று, "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நினைவு குழுவின்" நிறுவனர் தலைவர் பௌத்த துறவி சங்சில் இந்தக் குழுவின் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். நினைவுச்சின்னத்தின் அடிக்கல் நாட்டிற்கு மத்திய பிரதேச முதல்வர் சுந்தர் லால் பட்வா அழைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. பிறந்த இடத்தில், கட்டிட வடிவமைப்பு கட்டிடக் கலைஞர் இ.டி. நிம்கேட் அவர்களால் உருவாக்கப்பட்டது. பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. அம்பேத்கரின் சாம்பலைக் கொண்டுவருவதற்காக பண்டேஜி (பிக்கு) மும்பைக்குச் சென்றார், அவர் ஏப்ரல் 12, 1991 அன்று சாம்பலுக்கு திரும்பினார். 1991 ஏப்ரல் 14 அன்று அம்பேத்கரின் 100வது பிறந்த நாள் அன்று முதலமைச்சர் சுந்தர் லால் பட்வா அவர்களால் நினைவுச்சின்னத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடல் பிகாரி வாச்பாய் மற்றும் அமைச்சர், பெரூலால் பட்டிதர் மற்றும் பாண்டே தர்மசில் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். [13] பின்னர், பிரமாண்டமான பீம் ஜன்மபூமியில் அருங்காட்சியகம் கட்டப்பட்டது. மேலும் அருங்காட்சியகமும் அம்பேத்கரின் 117வது பிறந்த நாளான 2008 ஏப்ரல் 14 அன்றே திறக்கப்பட்டது.[14]

நினைவகத்தில் அம்பேத்கர் மற்றும் இரமாபாய் சிலைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி
அம்பேத்கர் மற்றும் கௌதம புத்தரின் சிலைகள்.

நினைவுச்சின்னத்தின் அமைப்பு பௌத்த கட்டிடக்கலை தாது கோபுரத்தைப் போன்றது. நினைவுச்சின்ன நுழைவாயிலுக்கு அருகில் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நினைவுச்சின்னத்தில் இந்தியில் "பீம் ஜென்மபூமி" (भीम जन्मभूमि) என சிலைக்கு மேலே செதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு பெரிய அசோக சக்கரம் உள்ளன. நினைவுச்சின்னத்தின் முன் மற்றும் நினைவுச்சின்னத்தின் மேற்புறத்தில் இரண்டு புத்த கொடி உள்ளது. நினைவுச்சின்னத்தின் உள்ளே, பாபாசாகேப்பின் வாழ்க்கை முறையின் பல உருவப்படங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கௌதம புத்தர், பாபாசாகேப் அம்பேத்கர், இவரது முதல் மனைவி இரமாபாய் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளும் உள்ளன. [15]

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Five must visit places to rediscover the life of Dr Babasaheb Ambedkar | India News" (in en-GB). https://www.timesnownews.com/india/article/five-must-visit-places-to-rediscover-the-life-of-dr-babasaheb-ambedkar-chaitya-bhoomi-chaityabhoomi/140984. பார்த்த நாள்: 2018-11-15. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-05-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-01-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "आंबेडकर स्मारक की आधारशीला रखने महू आए थे पूर्व मुख्यमंत्री पटवा" (in hi-IN). patrika.com. https://m.patrika.com/indore-news/madhya-pradesh-former-chief-minister-sunderlal-patwa-passed-away-1474586/. பார்த்த நாள்: 2018-11-15. 
  4. "महू में बनेगा आम्बेडकर स्मारक" (in hi-IN). फॉरवर्ड प्रेस. https://www.forwardpress.in/2015/01/mahu-me-banega-ambedkar-smark/. பார்த்த நாள்: 2018-11-15. 
  5. "Thousands throng Mhow to celebrate Ambedkar Jayanti - Times of India". https://m.timesofindia.com/city/indore/thousands-throng-mhow-to-celebrate-ambedkar-jayanti/articleshow/58186977.cms. 
  6. "प्रधानमंत्री मोदी ने महू में डॉ बाबासाहेब अम्बेडकर के जन्म स्थान का दौरा किया". https://www.narendramodi.in/hi/pm-modi-visits-the-birth-place-of-dr-bhimrao-ambedkar-440346. 
  7. "महू : बर्तन साफ करने वाली मां का बेटा पीएम बन पाया, तो उसका श्रेय बाबासाहेब को जाता है...". https://khabar.ndtv.com/news/india/mhow-dr-amdedkars-125th-anniversary-pm-narendra-modi-speech-1395476. 
  8. "बाबासाहेब की जन्मस्थली पर राष्ट्रपति के रूप में आना मेरा सौभाग्य: रामनाथ कोविंद– News18 हिंदी". News18 India. 2018-04-14. 2018-11-15 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  9. "Rich tributes paid to Ambedkar, Kovind visits Dalit icon's birthplace". 2018-04-14.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  10. "President Ram Nath Kovind, Other Leaders Pay Rich Tributes To Dalit Icon BR Ambedkar". https://www.ndtv.com/india-news/president-ram-nath-kovind-other-leaders-pay-rich-tributes-to-dalit-icon-br-ambedkar-1837663. 
  11. "Government to develop five places as Panchteerth in honour of B R Ambedkar". 2016-03-21. https://www.india.com/news/india/government-to-develop-five-places-as-panchteerth-in-honour-of-b-r-ambedkar-1048925/. 
  12. "BR Ambedkar Fought for Equality and Dignity: PM Modi". https://www.thequint.com/news/hot-news/br-ambedkar-fought-for-equality-and-dignity-pm-modi. 
  13. "B.R. Ambedkar's memorial in Mhow still under Army control". India Today (in English). 2018-11-15 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  14. "आंबेडकर स्मारक की आधारशीला रखने महू आए थे पूर्व मुख्यमंत्री पटवा" (in hi-IN). https://m.patrika.com/indore-news/madhya-pradesh-former-chief-minister-sunderlal-patwa-passed-away-1474586/. 
  15. "As Modi completes 2 years, a tale of 2 crematoriums at Ambedkar birthplace" (in en). hindustantimes.com/. 2016-05-26. https://m.hindustantimes.com/india/modi-govt-s-2-years-in-ambedkar-s-birthplace-a-tale-of-two-crematoriums/story-a35GS66nm4hiJ3iIRNrRcI.html. 

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bhim Janma Bhoomi
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. வழிமாற்று வார்ப்புரு:ஆளுமைக் கட்டுப்பாடு
"https://ta.bharatpedia.org/index.php?title=பீம்_ஜன்மபூமி&oldid=2655" இருந்து மீள்விக்கப்பட்டது