சுரேஷ் அங்காடி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
சுரேஷ் அங்காடி
Ambigara chouwdayya jayanti procession mp suresh angadi.jpg
இரயில்வே இணை அமைச்சர்
பதவியில்
30 மே 2019 – 23 செப்டம்பர் 2020
பிரதமர் நரேந்திர மோதி
அமைச்சர் பியுஷ் கோயல்
முன்னவர் மனோஜ் சின்கா
பின்வந்தவர் காலியிடம்
நாடாளுமன்ற சபைக் குழுவின் தலைவர்
பதவியில்
19 சூலை 2016 – 25 மே 2019
முன்னவர் அருண்ராம் மேக்வால்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
22 மே 2004 – 23 செப்டம்பர் 2020
முன்னவர் அமர்சிங் வசந்த்ராவ் பாட்டீல்
தொகுதி பெலகாவி
தனிநபர் தகவல்
பிறப்பு சுரேஷ் அங்காடி
சூன் 1, 1955(1955-06-01)
கே. கே. கொப்பா, கருநாடகம், இந்தியா
இறப்பு 23 செப்டம்பர் 2020(2020-09-23) (அகவை 65)
புதுதில்லி, இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) வார்ப்புரு:Marriage
பிள்ளைகள் 2 (மகள்கள்)
படித்த கல்வி நிறுவனங்கள் எஸ். எஸ். எஸ். சமிதி கல்லூரி, பெலகாவி, கருநாடகம்
ஆர். எல். சட்டக் கல்லூரி, பெலகாவி, கருநாடகம்

சுரேஷ் சனபசவப்பா அங்காடி (Suresh Angadi, 1 சூன் 195523 செப்டம்பர் 2020) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் இரயில்வே இணை அமைச்சரும் ஆவார். இவர் 2004 முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2019 முதல் 2020 வரை இவர் இறக்கும் வரை, இரயில்வே அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் கருநாடக மாநிலத்தை சேர்ந்த, பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்தார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

அம்பிகரா சவுத்ய்யா ஜெயந்தி விழாவில் கலந்துக் கொண்ட, சுரேஷ் அங்காடி

இவர் பெல்காமுக்கு அருகிலுள்ள (பின்னர் பெலகாவி என பெயர் மாற்றப்பட்டது) கே. கே. கொப்பா கிராமத்தில், ஒரு விவசாய குடும்பத்தில், சனபசவப்பா அங்காடி மற்றும் சோமவ்வா அங்காடி ஆகியோருக்கு, சூன் 1 1955 அன்று பிறந்தார். இவர் பெலகாவில் உள்ள எஸ். எஸ். எஸ். சமிதி கல்லூரியில், வணிகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் பெலகாவில் உள்ள ராஜா இலகம்கவுடா சட்டக் கல்லூரியில், சட்டப்படிப்பை முடித்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தல்களில், பெலகாவி தொகுதியில் இருந்து, தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற இவர், கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் வென்று தொடர்ச்சியாக நான்காவது முறையாகவும், மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மே 2019 இல், இவர் இரயில்வே இணை அமைச்சரானார் மற்றும் இவர் இறக்கும் வரை அமைச்சராகவே பணியாற்றினார். இவர் அமைச்சராக இருந்தபோது, ​​பெங்களூரில் புறநகர் பயணிகள் இரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தார்.

கருநாடகா முழுவதும் கல்லூரிகளை நடத்தி வரும் சுரேஷ் அங்காடி, கல்வி அறக்கட்டளைக்கும் தலைமை தாங்கினார்.

இறப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

செப்டம்பர் 2020இல், இவருக்கு கோவிட் -19 தொற்று பரிசோதனை செய்ததில், இவருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் இவர் புதுதில்லியில் உள்ள, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 23, 2020 அன்று தனது 65 ஆவது வயதில் இறந்தார். கோவிட் -19 தொற்றுக்கு இறந்த முதல் இந்திய அமைச்சர், இவரே ஆவார்.[2]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "சுரேஷ் அங்காடி மரணம் - இந்திய ரயில்வே இணை அமைச்சருக்கு என்ன நடந்தது?".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> பிபிசி தமிழ் (23 செப்டெம்பர், 2020)
  2. "கொரோனாவுக்கு பலியான முதல் மத்திய மந்திரி சுரேஷ் அங்காடி- டெல்லியில் இன்று இறுதிச்சடங்கு".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> மாலைமலர் (23 செப்டெம்பர், 2020)
"https://ta.bharatpedia.org/index.php?title=சுரேஷ்_அங்காடி&oldid=976" இருந்து மீள்விக்கப்பட்டது