நகர்புற உள்ளாட்சி அமைப்புகள்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

1991 - ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 42 … மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். · நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை 3 வகைப்படுத்தலாம். 1. மாநகராட்சி 2. நகராட்சி 3. பேரூராட்சி

மாநகராட்சி[தொகு | மூலத்தைத் தொகு]

மக்கள் தொகை அதிகமாக உள்ள பெரிய நகரங்களில் மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது 21 மாநகராட்சிகள் உள்ளன.அவை :

  1. சென்னை
  2. கோயம்புத்தூர்
  3. மதுரை
  4. திருச்சி
  5. சேலம்
  6. திருநெல்வேலி
  7. ஈரோடு
  8. வேலூர்
  9. தூத்துக்குடி
  10. திருப்பூர்
  11. திண்டுக்கல்
  12. தஞ்சாவூர்
  13. ஓசூர்
  14. நாகர்கோவில்
  15. ஆவடி
  16. தாம்பரம்
  17. காஞ்சிபுரம்
  18. கரூர்
  19. கும்பகோணம்
  20. கடலூர்
  21. சிவகாசி

மாநகராட்சியின் தலைவர் மேயர் என்று அழைக்கப்படுகிறார்.

மாநகராட்சியின் நிருவாக அலுவலர் ஆணையர் எனப்படுகிறார்.

மாநகரத்திலும் பல வார்டுகள் உள்ளன. வார்டு உறுப்பினர்களை ( கவுன்சிலர்கள்) மக்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள்.

பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர், மகளிருக்கு இட ஒதுக்கீடுகள் உண்டு.

மேயர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

சொத்துவரி, தொலைக்காட்சிக் கட்டணம், தொழில்வரி, விளம்பர வரி போன்றவை மாநகராட்சியின் முக்கிய வருவாய்களாகும்.

மாநகராட்சி அவையில் இயற்றப்படும் திட்டங்களை செயல்படுத்த மாநகராட்சி அலுவலகம் உள்ளது.

நகராட்சி[தொகு | மூலத்தைத் தொகு]

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுள்ள பேரூர்கள் நகராட்சிகள் ஆகச் செயல்படுகின்றன.

இவற்றின் தலைவரும், உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இவர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும்.

நகராட்சி ஆணையர் இதன் நிருவாக அலுவலர் ஆவார்.

தமிழகத்தில் மொத்தம் 102 நகராட்சிகள் உள்ளன.

நகரங்கள் ஒவ்வொன்றும் வார்டுகளாக பிரிக்கப்பட்டு,வார்டு உறுப்பினர்களை மக்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.

நகராட்சி மன்றம் இயற்றும் தீர்மானங்களை செயல்படுத்த நகராட்சி அலுவலகம் உள்ளது.

வீட்டுவரி, கேளிக்கை வரி, தொழில்வரி, குடிநீர் வரி போன்றவைகள் முக்கிய வருவாய்கள் ஆகும்.

புளுகிராஸ் என்ற அமைப்பு விலங்குகளை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சி[தொகு | மூலத்தைத் தொகு]

· பத்தாயிரம் மக்கள் தொகைக்கும் மேலுள்ள ஊராட்சிகள், பேரூட்ராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படுகின்றன. · தமிழகத்தில் மொத்தம் 611 பேரூராட்சிகள் உள்ளன. · பேரூராட்சியின் தலைவரும், மன்ற உறுப்பினர்களும் நேரடித் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். · பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். · இட ஒதுக்கீடு உண்டு. · பேரூராட்சி நிருவாகத்தைச் செயல் அலுவலர் கவனித்துக் கொள்கின்றார்.