இடங்கணசாலை

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
இடங்கணசாலை
—  நகராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் சங்ககிரி
ஆளுநர் {{#property:p35|from=Q1445}}[1]
முதலமைச்சர் {{#property:p6|from=Q1445}}[2]
மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

33,245 (2011)

Script error: No such module "convert".

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு Script error: No such module "convert".
இணையதளம் www.townpanchayat.in/edanganasalai

இடங்கணசாலை (ஆங்கிலம்:Edaganasalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இடங்கணசாலை நகராட்சியும் மற்றும் அதன் அருகாமையில் உள்ள இளம்பிள்ளை பேரூராட்சியும் கைநெசவுத் தொழிலுக்கு சிறந்து விளங்குகிறது

2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்[தொகு | மூலத்தைத் தொகு]

பேரூராட்சியாக இருந்த இடங்கணசாலை 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சியாக நிறுவுவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[4][5]

அமைவிடம்[தொகு | மூலத்தைத் தொகு]

இடங்கணசாலை பேரூராட்சிக்கு கிழக்கே சேலம் 20 கிமீ; மேற்கே சங்ககிரி 34 கிமீ; வடக்கே ஓமலூர் 25 கிமீ மற்றும் தெற்கே இளம்பிள்ளை 1 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

24.5 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 64 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [6]

மக்கள் தொகை பரம்பல்[தொகு | மூலத்தைத் தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8,631 குடும்பங்களும், 33,245 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 68.1% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 888 பெண்கள் வீதம் உள்ளனர்.[7]

பெயர் காரணம்[தொகு | மூலத்தைத் தொகு]

முந்தைய காலங்களில் இப்பகுதியில் விவசாயிகளால் வளர்க்கப்பட்ட கால்நடைகளின் இளங்கன்றுகள் இவ்வூரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பழைமையான ஏரியில் நீர் அருந்த வந்ததனால் இவ்வூர் இளங்கன்சாலை என்று அழைக்கப்பட்டது பின்னர் இடங்கணசாலை என்றானது.

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. kumbakonam corporaon and 19 muniicipalites
  5. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
  6. இடங்கணசாலை பேரூராட்சியின் இணையதளம்
  7. Edaganasalai Population Census 2011
"https://ta.bharatpedia.org/index.php?title=இடங்கணசாலை&oldid=16288" இருந்து மீள்விக்கப்பட்டது