கொலைகாரன் பேட்டை

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கொலைகாரன் பேட்டை (Kolaikaran Pettai) என்பது சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இராயப்பேட்டையின் ஒரு பகுதியாகும். கௌடியா மடச் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் இந்தத் தெருவில் கொலைகாரன் பேட்டை முதல் தெரு, கொலைகாரன்பேட்டை இரண்டாம் தெரு என்றும் இரண்டு தெருக்களாக அமைந்துள்ளன. கொலைகாரன் பேட்டையில் 500 வீடுகள் உள்ளன என்றாலும் இதன் பெயருக்காகவே சிறப்பாக அறியப்படுகிறது.

பெயர்க் காரணம்[தொகு | மூலத்தைத் தொகு]

இந்தப் பகுதிக்கு கொலைகாரன் பேட்டை என்ற பெயர் வந்ததற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்தப் பகுதியில் கொலைகாரர்களோ சமுக விரோதிகளோ வசித்ததற்கு ஆதாரம் ஏதும் இல்லை. எனவே, இந்தப் பெயர் வேறொரு சொல்லிலிருந்து மருவிவந்த ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதி பின்வரும் பெயர்களில் இருந்து பெயர் மருவி இருக்களாம் என்று கூறுகின்றனர். அவ்வாறு கூறப்படும் பல்வேறு காரணங்கள் பின்வருமாறு;[1][2]

  • அந்தக் காலத்தில் இப்பகுதியில் பெண்கள் கோலாட்ட நடனப் பயிற்சியிலும் ஆண்கள் சிலம்பாட்டப் பயிற்சியிலும் ஈடுபட்டனர் என்றும், அதன் காரணமாக அந்தத் பகுதியின் பெயர் கோல்காரன் பேட்டை என்று இருந்து அது பின்னர் மருவியது,
  • அந்தக் காலத்தில் அங்கிருந்த அனைத்து வீடுகளின் பின்புறத்திலும் தோட்டங்கள் இருந்திருக்கின்றன. இதனால் அந்தப் பகுதி கொல்லைக்காரப் பேட்டை என்று அழைக்கப்பட்டது அது பின்னர் மருவியது.
  • இரும்பு வேலைகள் செய்யும் கருங்கொல்லர்களும் பொன், வெள்ளி போன்ற உலோகங்களிலிருந்து அணிகலங்கள் செய்யும் பொற்கொல்லர்களும் அந்தக் காலத்தில் அங்கு வாழ்ந்ததாகவும், அதனால் அந்தப் பகுதிக்குக் கொல்லர்பேட்டை என அழைக்கப்பட்டு பின்னர் மருவியது.
  • இந்தப் பகுதியில் கோல மாவு விற்கப்பட்டதால் இது கோலக்காரன்பேட்டை என்று அழைக்கப்பட்டதாகவும் அதுவே மருவியது.
  • சிற்பிகளும் கல் உடைப்பவர்களும் கல் கொத்துபவர்களும் அங்கு வசித்ததால் அந்தப் பகுதி கல்லுக்காரன்பேட்டை என்று இருந்து பின்னர் மருவியது.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. முகமது ஹுசைன் (24 மார்ச் 2018). "பெயரைச் சொன்னாலே அதிரும் பேட்டை!". கட்டுரை. தி இந்து தமிழ். 1 ஏப்ரல் 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "​Twists of tongue give new meaning to old streets". timesofindia.indiatimes.com. 1 ஏப்ரல் 2018 அன்று பார்க்கப்பட்டது. zero width space character in |title= at position 1 (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=கொலைகாரன்_பேட்டை&oldid=18158" இருந்து மீள்விக்கப்பட்டது